இலங்கையில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயம் – இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம்

அடுத்த மாதத்தில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் அறிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் டானியா அபயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இனி தங்களது தொழிலை நடத்த முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதுவரை காலமும் சேமிப்பில் தங்களுடைய தொழில்களை நடத்தி வந்தோம்.

எனினும்,தற்போது அதனை தொடர்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சடிக்கப்படுவதாகவும்,

எனினும், தனியார் துறை ஊழியர்களுக்கு என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Thedal Media Editor

Next Post

விவசாயத்துக்கு தேவையான எரிபொருளை துரிதமாக வழங்கும் வேலைத்திட்டம் தயார் - அமைச்சர் மஹிந்த அமரவீர

Thu May 26 , 2022
விவசாயத்துக்கு தேவையான எரிபொருளை விவசாயிகளுக்கு துரிதமாக வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய தெரிவு செய்யப்பட்ட 217 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும். இதன்படி யாழ்ப்பாண எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்கவும், விவசாயிகளுக்கு கான்களில் எரிபொருளை விநியோகிக்கவும் பிரதேச கமநல சேவை அதிகாரியின் கடிதத்தினை உறுதிபடுத்திய பின் பெற்றுக்கொள்ளலாம். யாழ். மாவட்டம். யாழ்ப்பாணம் […]

You May Like