இலங்கையின் மதுவரி திணைக்களத்திற்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்…!!

இலங்கை மதுவரி திணைக்களத்திற்கான வருமான நிர்வாக முறைமை ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை மதுவரி திணைக்களம் வருமானம் ஈட்டும் திணைக்களமாக இருந்தாலும், திணைக்களத்தில் தற்போதுள்ள பழைய முறைமைகள் அதன் வருவாய் நிர்வாகச் செயற்பாடுகளுக்குத் துணைபுரிவதில் பயனற்றவையாக இருப்பதால், வருவாய் கசிவு மற்றும் முறைகேடுகள் போன்ற திறமையின்மைகள் ஏற்படுகின்றன.

இதற்கமைய, ஏனைய நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதில் சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

இதன்படி, இலங்கை மதுவரி திணைக்களத்திற்கான வருமான நிர்வாக முறைமையொன்றை அறிமுகம் செய்வதற்கு நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் முகமாக மிகவும் வினைத்திறனுள்ள மற்றும் பயனுள்ள தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைப்பை நிறுவும் நோக்குடன் அனைத்து தரவு பரிமாற்றம், இடர் மேலாண்மை மற்றும் வருவாய் ஒப்பீடு ஆகியவற்றை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி ரணில்..!!

Fri May 24 , 2024
யாழ்ப்பாணம் நகரில் போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) காலை திறந்து வைத்துள்ளார். குறித்த கட்டட தொகுதி 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu