இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டவரையும் கவர புதிய நடவடிக்கை…!!

இலங்கை

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு பயணிகளும் அவர்கள் பயணம் முடித்து திரும்பும் போது விமான நிலையத்தில் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசை வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர திட்டமிட்டுள்ளார்.

சிலோன் தேயிலையின் பெயரை உலகில் பிரபலப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் துறையின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், இலங்கை தேயிலை சபை, சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் அமரவீர இந்த யோசனையை முன்வைத்தார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை முடித்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது அவர்களுக்கு இந்த நினைவுப் பரிசை வழங்குவதற்கான யோசனைக்கு தனியார் தேயிலை உற்பத்தியாளர்களும் இணக்கம் தெரிவித்ததுடன், அதற்கு பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் அமரவீரவுக்கு அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

10 வருடங்களாக கோமாவிலிருந்த கணவரை அன்பினால் குணப்படுத்திய மனைவி - சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்...!!

Wed May 15 , 2024
மனைவியின் ஈடு இணையற்ற அன்பால், கடந்த 10 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கணவர் மீண்டு வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் கடந்த 2014ஆம் ஆண்டு மாரடைப்பால் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றார். ஆனால், என்றாவது ஒரு நாள் தனது கணவர் இந்த நிலையில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையை இழக்காமல் அவரது தேவைகளை நிறைவேற்றி தற்போது […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu