இலங்கைக்கான உணவு மற்றும் மருந்துக்கான உலகளாவிய கோரிக்கையை முன்வைக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது. இதற்கான உலகளாவிய கோரிக்கையை ஜூன் 8 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக முன்வைக்க உள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை இலங்கைக்கு வருகை தந்து உணவு நெருக்கடி நிலைமை குறித்து கலந்துரையாடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.