இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பஸ் சேவை.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல் அனைத்து பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், அதனை மையமாகக் கொண்டு இவ்வாறு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிவேக வீதியிலும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரச ஊழியர்களின் சேவைகளை மையப்படுத்தி மேலதிக ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வழமையான முறைமையின் கீழ் முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Next Post

ஆசிரியர்களை அடிக்க வேண்டாம் − ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவு.

Sun Aug 1 , 2021
ஆசிரியர் சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிய வருகின்றது. கொவிட் சட்டத்திற்கு அமைய, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டமையை அடுத்து, பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் பொறுப்புள்ள படித்தவர்கள் என்பதனால், மக்களை தெளிவூட்டும் கட்டாயம் அவர்களுக்கு உள்ளதாகவும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu