இன்றும் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி சிலிண்டர்களுக்கு வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ கேஸ் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் இதே போன்ற அறிவிப்பை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில் எரிவாயு விநியோகமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.