இனி ரீ 100 ரூபா……
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்தனால் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.