இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்து சிதறிய எரிமலை – விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை….!!

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எரிமலை வெடித்ததால். அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிக அச்சமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறுவது இந்த மாதத்தில் இது 2வது முறையாகும். முன்னதாக, கடந்த 16ஆம் திகதி ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சாரக் கட்டணம்...!!!

Thu May 2 , 2024
இலங்கை இலங்கையில் நடப்பு மே மாதததிற்குள்ளாக மின்சாரக் கட்டணம் மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக 30 அலகுகளுக்குக் கீழ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 33% கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணம் மீண்டும் கணிசமான அளவில் குறைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu