இந்திய – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் – முன் பதிவுகள் ஆரம்பம்…!!

இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.​

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் மே மாதம் 13ஆம் திகதி முதல் இயக்கப்படும் என கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதற்கமைய, நாகை-இலங்கை இடையை இயக்கப்படும் சிவகங்கை கப்பல் அந்தமானில் தயாராகி வந்த நிலையில் கப்பல் வெள்ளிக்கிழமை (10) சென்னை துறைமுகம் வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் சென்னையில் இருந்து சனிக்கிழமை (11​) நாகை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை (12) நாகை துறைமுகத்தை வந்தடையவுள்ளதோடு திங்கட்கிழமை (13) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் 160 பேர் பயணிக்கும் வகையில் இந்த கப்பல் இயக்கப்படவுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாட்டில் இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் கொடிய நோய்!

Sun May 12 , 2024
நாட்டில் இளைஞர்களிடையே டினியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இளைஞர்கள் இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் இந்த நோய் நிலைமை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், பூஞ்சை தொற்றினால் இந்த தோல்நோய் பரவுவதாகவும் தோல்நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க தெரிவித்தார். தகுதி வாய்ந்த வைத்தியர்களிடம் இதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu