இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி அல்லது 11ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பல் இம்மாதம் 28 ஆம் திகதி ஓமானில் இருந்து புறப்பட உள்ளது. கிடைக்கும் உரம் ஜூலை 15ஆம் திகதி முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
யூரியா உர மூட்டை சுமார் 10,000 ருபா மதிப்பில் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.