இந்தியாவின் இரு வேறு பகுதிகளில் தீ விபத்து!

இந்தியாவின் டில்லி நகர் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

மேலும், 5 குழந்தைகள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு 11.30 மணியளவில் தங்களுக்கு குறித்த மையத்திலிருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்ததாகவும் இதனையடுத்து தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதுடன் ஸ்தலத்திற்கு சென்றோம். அங்கு சென்ற வேளையில் அருகிலிருந்த கட்டிடத்திற்கு தீ பரவி இருந்தது. ஆனால் அதில் இருந்தோர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இன்று காலை தீ அணைக்கப்பட்டதென இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. வைத்தியசாலைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த ஒக்சிஜன் சிலிண்டர்கள் விபத்தில் வெடித்துச் சிதறி தீயை மேலும் அதிகரித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க்ப்பட்டுள்ளதாக இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

13ஐ அமுல்படுத்துவதற்கு தாதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுங்கள் - கரு ஜயசூரிய வேண்டுகோள்!

Sun May 26 , 2024
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதோடு சர்ச்சைக்குரிய காணிப் பிரச்சினையை உத்தேச காணி ஆணைக்குழுவின் ஊடாக தாமதமின்றி தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடமும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலுக்கு முன்னதாக நிலவும் இன மற்றும் மத அவநம்பிக்கையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரிடத்திலும் பகிரங்க கோரிக்கை விடுத்து […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu