இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்…!!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை அரசு நடவடிக்கை...!!

Mon Apr 29 , 2024
இலங்கை பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதையடுத்து, வெங்காயத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சங்கத்தின் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் அடுத்த வாரத்தில் சந்தையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu