சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு சீனாவுடன் கலந்துரையாடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் Sunday times க்கு தெரிவித்தார்.
அவசரகால தேவைக்காக டீசல் இருப்புக்களை வழங்குவதற்கு சீனா வழங்கிய சலுகைக்கு இலங்கை பதிலளிக்கவில்லை என தெரியவந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியேற்பதற்கு முன்னர் இந்த சலுகை வழங்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். எனினும் இதற்கு தற்போதுவரை சீனாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமல் உள்ளது.
சிங்கப்பூரில் உள்ள கையிருப்பில் இருந்து டீசலை வழங்க சீனா தயாராக உள்ளது, ஆனால் இலங்கையின் அணுகுமுறை சீனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் சீனாவின் உதவியின் கீழ் சீனாவிலிருந்து அரிசியின் முதலாவது ஏற்றுமதி இலங்கைக்கு வரவுள்ள நிலையில், தேவையான குறிப்பிட்ட மருந்துகளின் பட்டியலையும் வழங்குமாறு சீனாவால் இலங்கையிடம் கோரப்பட்டுள்ளது.