அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை – பிரதமர் ஊடகப் பிரிவு

அடுத்து வரும் வாரங்களில் பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் முன் வைக்கப்பட இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட இருப்பதாக வெளியான செய்தியை பிரதமர் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதே நேரம் , சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர அனைத்து அமைச்சுகளுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் எனவும் பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

Thedal Media Editor

Next Post

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி - இலங்கையை போன்ற நிலை ஏற்படும்??

Fri May 27 , 2022
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மத்திய வங்கியில் திரவ வெளிநாட்டு நாணய கையிருப்பு சுமார் 10 பில்லியன் டொலராக குறைந்துள்ளது, இது இரண்டு மாத இறக்குமதி செலவை மட்டுமே போதுமானது. பாக்கிஸ்தான் இறுதியில் இலங்கையை போன்ற நிலை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி 6 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை பெறுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், எரிசக்தி மற்றும் கோதுமை போன்ற முக்கிய […]

You May Like