அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக பொதுஜன பெரமுன எச்சரிக்கை..!!

ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பாராயின் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.

நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் தேர்தலை பிற்போடுவதற்கு தங்களது கட்சி ஒத்துழைப்பு வழங்காது என, சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சி என்ற ரீதியில் தங்களது தரப்பினர் ஜனாதிபதியின் குறித்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை - மேலும் இருவர் உயிரிழப்பு...!!

Sun Jun 2 , 2024
இலங்கையில் கன மழையுடனான வானிலை நிலவுவதனால் பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. சீரற்ற வானிலையால் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் எனவும், இதனால் பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தேவையேற்படின் இடம்பெயரத் தயாராக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அயகம, தும்பர பகுதியில் மண்மேடு சரிந்து […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu