21ஆம் திருத்தம் தொடர்பான கருத்தாடல்கள் அரசியல் அரங்கை சூடாக்கியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அவர் பதவி விலகியதன் பின்னர் அது தொடர்பான விடயங்களை விளக்குவதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வார இறுதியில் அவர் குறுகிய காலத்துக்கு அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பதற்காக முழு நேர பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே நேரம் பஷில் ராஜபக்ச பதவி விலகினால் அவ்விடத்திற்கு நியமிக்கப்படவிருப்பதாக கூறப்படும் வர்த்தகர் தம்மிக்க பெரேராவிற்கும், பஷில் ராஜபக்சவுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.