அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு 9 ஆயிரம் டொலர் அபராதம்…!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு 9 ஆயிரம் டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டிரம்ப், தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக நீதிமன்றில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டை அவமதித்ததாக கூறி டிரம்ப் நேற்று கோர்ட்டில் ஆஜா்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவருக்கு 9 ஆயிரம் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.5 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் நீதிமன்றத்தின் உத்தரவை மீண்டும் மீறினால் சிறையில் அடைக்க நேரிடும் என டிரம்பை நீதிபதி எச்சரித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்பு: கற்பிட்டியில் சம்பவம் - தாய் கைது!

Thu May 2 , 2024
கற்பிட்டி , கந்தகுடாவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் அருகில் உள்ள கிணற்றிலிருந்து இன்று (2) அதிகாலை இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu