பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 53 வயதான முச்சக்கர வண்டி சாரதி எனவும் மற்றையவர் ஹப்புத்தளையை சேர்ந்த 27 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் விசாரணைகள் துரித கதியில் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக இதுவரை 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்