அதிரடி காட்டிய சூரியின் கருடன் – டிரைலர் வெளியானது…!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலைப்படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக கருடன் படத்தில் நடித்துள்ளார். மேலும், சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், நம்ம ஆசைப்பட்ட விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ இயற்கையோ அதை சரியான வழியில முடிச்சி வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திக்கிட்டு இருக்கு என்கிற பின்னணி குரலுடன் டிரைலர் தொடங்குகிறது.

அதிரடி ஆக்ஷன் சண்டை காட்சிகள் அனைவரையும் அலறவிட்டுள்ளது. இதில் சொக்கன் என்கிற கதாபாத்திரத்தில் கருணா நண்பனாக நடித்துள்ளார். விடுதலை படத்தைப் போல இந்த படத்திலும், ஆக்ஷன் காட்சியிலும், எமோஷனிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். தற்போது வெளியான இந்த டிரைலர் யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

முன்னதாக இப்படத்தின் இசைவெளியிட்டு விழாவில் பேசிய சூரி, காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும் பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு சென்று விடுவோம், ஆனால், கதாநாயகனாக நடிக்கின்ற போது மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருப்பதாக உணர்கிறேன் என்றார். கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெனக்கெட வேண்டிய உள்ளது. மேலும் தான் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை அடைகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நெதன்யாகுவை கைது செய்வதற்கான கோரிக்கை - ஆதரவு தெரிவித்த இரு ஐரோப்பிய நாடுகள்..!!

Wed May 22 , 2024
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான கோரிக்கையை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன. பாலஸ்தீனப் பகுதியில் பல மாதங்களாக அதிகரித்து வரும் வன்முறையின் ஒரு பகுதியாக ஜெனினில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்க ஆதரவு எழுந்துள்ளது. முதன்மை வழக்கறிஞரான கரிம் கான், இஸ்ரேல் மற்றும் காசா முனையில் மனித குலத்திற்கு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu