அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் மற்றும் பதுக்கி வைக்கும் வர்த்தகர்கள், ஆலை உரிமையாளர்களைத் தேடி அம்பாறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி இன்று சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நாவிதன்வெளி, மத்திய முகாம் போன்ற பிரதேசங்களில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது கட்டுப்பாட்டு விலையை மீறி விலைக்கு ௮ரிசியை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.