எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெறுவது தொடர்பில் அடுத்த மூன்று வாரங்கள் நாட்டுக்கு கடினமான காலமாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 5 பில்லியன் டொலர் தேவைப்படுவதுடன், வெளிநாட்டுக் கையிருப்புகளை பராமரிக்க மேலும் ஒரு பில்லியன் டொலர் தேவை என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“இந்த உதவியை வெளிநாட்டில் இருந்து பெற வேண்டும்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 4 முதல் 5 சதவீதமாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) கணித்துள்ளது. இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) பொருளாதாரத்தில் எதிர்மறையான வளர்ச்சி அதிகமாக இருக்கும் எனவும் 2022ல் பொருளாதாரம் -6.9 சதவீதம் சுருங்கும் எனவும் மதிப்பிட்டுள்ளது என்றார்.
.