அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘பிரேமலு’ நஸ்லென்..!!

அஜித்தின் 63-வது படமாக உருவாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் இதனை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தின் தலைப்புக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் நல்லவன், கெட்டவன் மற்றும் அக்லி என மூன்றையும் பிரதிபலிக்கும் வகையில் அந்த லுக் கவனம் ஈர்த்தது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘பிரேமலு’ படத்தில் ஹீரோவாக நடித்த நஸ்லென் கஃபூர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

கிரிஷ் ஏடி இயக்கத்தில் வெளியான ‘பிரேமலு’ படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் தெலுங்கு மாநிலங்களிலும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் காட்சிகள், வசனங்கள் ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா 4’ - செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு..!!

Sat Jun 8 , 2024
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019-ல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். ஹாரர் – காமெடி ஜானரில் உருவான இப்படங்கள் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்தது. ‘காஞ்சனா’ சீரிஸ்களின் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக ‘காஞ்சனா 4’ படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu